அண்மையில், சீனாவின் அந்நிய செலாவணிக் கொள்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மூலதனங்கள் வெளிநாட்டுக்கு செல்வது மேலும் கடினமாக மாறும். இது குறித்து, சீனாவின் தொடர்புடைய கண்காணிப்பு வாரியங்கள் பலமுறையே தெளிவுப்படுத்தியுள்ளன. சீன மத்திய வங்கியின் துணைத் தலைவரும், சீன அன்னிய செலாவணி மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான பான் கோங் செங் அண்மையில், சீன-ஐரோப்பிய ஒன்றிய வணிக் சங்கத் தலைவர் வூதேக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனத் தேசிய அந்நிய செலாவணி மேலாண்மை ஆணையம் தொடர்புடைய கொள்கையின் தொடர்ச்சியான தன்மையை நிலைநிறுத்த வேண்டும். வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதி மயமாக்கத்தை ஆழமாக மேம்படுத்த வேண்டும். சீனாவில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் பெறும் இலாபம், வெளிநாட்டுக்கு வழங்கப்படுவதற்கு கட்டுப்பாடு இல்லை. வலிமையான, வாய்ப்பு கொண்ட தொழில் நிறுவனங்கள், சட்டத்தின்படி, வெளிநாடுகளில் நேரடியான முதலீடு செய்வதைச் சீனா ஊக்குவிக்கிறது என்று இச்சந்திப்பின் சந்தித்த போது பான் கோங் செங் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு, அந்நிய செலவாணி தொடர்பான புதிய விதிகளை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், தனிநபர் அந்நியய செலாவணியை வாங்கப் பரிசீலனை மற்றும் நிர்வாகத்தை சீனா வலுபடுத்தியுள்ளது. இதனிடையே, அந்நிய செலவாணிக் கொள்கையின் கட்டுபாடு பற்றிய கூற்று பரவியுள்ளது.
தற்போதைய கொள்கை என்ற கட்டுகோப்புக்குள், சீனாவின் தொடர்புடைய கண்காணிப்பு மற்றும் மேலாண்மை வாரியங்கள், அந்நிய செலாவணிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும். அந்நிய செலாவணி மேலாண்மை மற்றும் பண மோசடி தடுப்பு முதலிய விதிகளின்படி, வங்கிகளின் மூலம், வர்த்தகத்தின் உண்மை தன்மையைச் சரிப்படுத்தி, சட்டப்பூர்வமான பரிசீலனையை சீனா உயர்த்த வேண்டும். இது, சர்வதேசச் சமூகத்தில் பொது நடைமுறையாகும். இது, மூலதனம் மீதான கட்டுபாட்டுக்குச் சமமில்லை என்று நிபுணர்கள் சிலர் கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தொடர்பான கண்காணிப்புகளை வலுப்படுத்துவது, குறிப்பிட்ட நேரத்தில் அந்நிய செலாவணி சந்தை பெரியளவு ஏற்றத்தாழ்வு நிகழ்வதைத் தவிர்ப்பதற்காகும் என்று போக்குவரத்து வங்கியின் தலைமை பொருளியலாளர் லியென் பீங் தெரிவித்தார்.