• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் தியன்ஜின் ஹேபெய் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி
  2017-01-26 18:41:04  cri எழுத்தின் அளவு:  A A A   
பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் ஒருமைப்பாட்டுக் கட்டுமானத்தின் குறுகிய கால இலக்குகள் 2017ஆம் ஆண்டுக்குள் நனவாக்கப்பட வேண்டும். போக்குவரத்து ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்துறையின் நிலை உயர்வு உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் காண்பது, இந்த இலக்குகளில் அடங்கும். புத்தாக்கம், வளர்ச்சிக்கு வழிகாட்டும் முதலாவது ஆற்றலாகும். பெய்ஜிங் போன்று, நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தியன்ஜின் மாநகரம், பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் புத்தாக்கத்தின் மூலம் பங்காற்றி வருகிறது.

பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் ஆகிய மூன்று இடங்களில் அமையும் இருப்புப்பாதை தொடரமைப்புக்கான வரைவுத் திட்டம் 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்ஜிங்-ச்சாங்ஜியாகொவ் இருப்புப்பாதை, தாதோங்-ச்சாங்ஜியாகொவ் இருப்புப்பாதை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளன. தலைநகரைச் சூழ்ந்த உயர்வேக நெடுஞ்சாலையின் லாங்ஃபாங் பகுதி, பெய்ஜிங்-சின்ஹுவாங்தௌ உயர்வேக நெடுஞ்சாலையின் தியன்ஜின் பகுதி, பெய்ஜிங்-தைபெய் உயர்வேக நெடுஞ்சாலையின் பெய்ஜிங் பகுதி ஆகியவை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தியன்ஜின் புதிய உயர் தொழில் நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள காய்ஃபா மின்சார நிறுவனம் இவை தொடர்பான பல திட்டப்பணிகளில் பங்கினை வழங்கி வருகிறது. அது வடிவமைத்து தயாரித்த தானியங்கி வசதிகள், முக்கிய இருப்புப்பாதைகளில் மட்டுமல்ல, நெடுஞ்சாலை, சுரங்க இருப்புப்பாதை ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் பகுதி, சீனாவின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க மையமாகும். முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்களும், அறிவியல் ஆய்வுக்கான தரமிக்க காரணிகளும் இப்பகுதியில் காணப்படுகின்றன. கனடாவின் முதலாவது நுண்ணிய மின் இணைத்தொகுதி திட்டப்பணிக்கான திட்டம், தியன்ஜினின் தியன்தாச்சியூஷி நிறுவனத்தால் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நுண்ணிய மின் இணைத்தொகுதி தொடர்பான தொழில் நுட்பம், மின்னாற்றல் மற்றும் நீர் சுழற்சி முறைமை மூலம் வெப்ப விநியோகத்தை நிறைவேற்றி, எரியாற்றலின் பயன்பாட்டை மேம்படுத்த முடியும். பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய் ஆகியவை இணைந்து காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இது துணைபுரியும். எனவே இந்தத் தொழில் நுட்பத்தைப் பரப்புரை செய்ய தியன்தாச்சியூஷி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, இந்த மூன்று இடங்களில் சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்துக்கான சோதனை திட்டப்பணிகள் ஆழந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், புத்தாக்கம் மற்றும் தொழில் நடத்துதலுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிட்ட ஒன்றியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும், பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் நடத்தும் நபர்களுக்கும் பயனளிக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040