2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் முதலாவது ஆய்வுக் கலனைச் செலுத்தவும், செவ்வாய் கிரகத்தைச் சுற்றிப் பறத்தல் மற்றும் செவ்வாயில் தரையிறங்குதல் பணிகளை நிறைவேற்றவும் சீனா திட்டமிட்டுள்ளது. பிறகு, 2-ஆவது முறை செவ்வாய் ஆய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தி செய்வாயில் இருந்து பொருட்கள் புவிக்கு கொண்டு வரப்படும். மேலும், சிறிய கிரகத்துக்கான ஆய்வுப் பயணம் மேற்கொள்வது, வியாழன் கோளுக்கான ஆய்வுத் திட்டத்தை வகுப்பது ஆகிய இலக்குகளும் எதிர்காலத்தில் நிறைவேறப்படும்.
எதிர்காலம் சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் மேற்கூறிய நான்கு முக்கிய பணிகள் நடைமுறைக்கு வரும் என்று சீனாவின் தேசிய விண்வெளி ஆணையத்தில் இருந்து 30ஆம் நாள் கிடைத்த தகவல் கூறியுள்ளது.