• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பு நிலைமை
  2017-01-31 19:39:49  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், சீனாவின் நெடுநோக்குத்தன்மை வாய்ந்த சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பின் முக்கிய திட்டப்பணி பற்றிய முதல் கட்ட வழிக்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனைச் சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் யே டுங்பெய் அறிமுகப்படுத்திக் கூறுகையில், இந்தத் தொகுதி திட்டப்பணிகளில், கூட்டு ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரித் திட்டப்பணியும் நாட்டின் நிலையான சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புத் தளம் மற்றும் மேடைத் திட்டப்பணியும் உள்ளன. இதில், வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம், எரியாற்றல், மூலவளம், சுற்றுச்சூழல், சீற்றத் தடுப்பு உள்ளிட்ட 13 துறைகள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்தச் சிறப்புத் திட்டப்பணிகள், சீனா சர்வதேச சமூகத்துடன் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளும் முன்னேறிய திட்டப்பணிகளாகும். "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற சீனா முன்வைத்துள்ள முக்கிய நெடுநோக்கின் நடைமுறைக்கு ஆதரவளித்து, பல்வேறு இடங்களின் ஒத்துழைப்புக்குச் சேவை புரிந்து, உலகப் புத்தாக்க வலைப்பின்னல் கட்டுமானத்தை மேம்படுத்துவது, அதன் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து, சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் யே டுங்பெய் கூறியதாவது:

"ஒரு மண்டலம் ஒரு பாதை"கட்டுமானத்தில், அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் முக்கிய வழிகாட்டல் பங்கினை ஆற்றுவதை முன்னேற்ற வேண்டும். அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பின் மூலம், "ஒரு மண்டலம் ஒரு பாதை"என்ற நெடுநோக்கின் நெடுகிலும் அமைந்துள்ள நாடுகள் சீனாவின் மீதான புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் அரசின் முயற்சியையும் அரசுசாரா ஒத்துழைப்பையும் இணைக்கும் வழிமுறையின் மூலம், ஒப்பீட்டளவில் முழுமையான சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வலைப்பின்னல் அடிப்படையில் உருவாகப்பட்டுள்ளது. சீனா, 158 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பை நிறுவி, அரசாங்கங்களிடையேயான 111 ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு, 200க்கும் கூடுதலான சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களில் சேர்ந்துள்ளது. இதனால் நிலையான அரசாங்களிடையேயான ஒத்துழைப்பு அமைப்புமுறை உருவாகியுள்ளது.

சீனா, வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு நிலைமையை மேலும் மேம்படுத்தி, மேலும் திறப்பான புத்தாக்க சூழ்நிலையை உருவாக்க முயன்று வருகிறது. இது குறித்து யே டுங்பெய் மேலும் கூறியதாவது:

இக்கட்டத்தின் திட்டப்பணிகளில், "ஒரு மண்டலம் ஒரு பாதை"என்ற நெடுநோக்கின் நெடுகிலும் அமைந்துள்ள நாடுகளுடனான ஒத்துழைப்பு முக்கிய இடம் வகிக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைமை மாற்றத்தின் படி, எதிர்காலத்தில் புதிய முக்கிய கடமை சேர்க்கப்படும் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040