• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் புதிய கொள்கைகள்
  2017-02-02 14:30:48  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த ஆண்டு சீனாவின் வீட்டுமனை சந்தையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. இவ்வாண்டு ஜனவரியில் வீட்டு விற்பனையின் ஒப்பந்தங்கள் ஓரளவு குறைந்த போதிலும், சில நகரங்களில் வீட்டின் விலை மற்றும் வீட்டுக்கான தேவை இன்னும் உயர் நிலையில் உள்ளன. வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையைச் சரிப்படுத்தும் வகையில், பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங், சோங்சிங் உள்ளிட்ட இடங்கள் அண்மையில் புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளன. நான்ஜிங் நகரில், வெளியூர் மக்கள் புள்ளிகளின் மூலம் குடியிருப்பு பதிவு பெறும் புதிய கொள்கை பிப்ரவரி 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் தொடங்கியது. ஜனவரி முதல், பெய்ஜிங்கில் முதலாவது வீட்டுக் கடனின் வட்டி விகிதத்துக்கான தள்ளுபடி 15 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் முற்பாதியில், பெய்ஜிங், ஷென்சென், நான்ஜிங் உள்ளிட்ட முதலாவது மற்றும் இரண்டாவது நிலை நகரங்களில் வீட்டுமனையின் எண்ணிக்கையும் விலையும் ஒரேநேரத்தில் அதிகரித்தன. ஆனால் அக்டோபர் திங்கள் வீட்டுமனை சந்தையைச் சரிப்படுத்தும் கொள்கைகளை சீனாவின் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் அடுத்தடுத்து வெளியிட்டன. மேலும், ஊக வணிகம் மேற்கொள்வதற்குப் பதிலாக வசிப்பதற்குத் தான் வீடு அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நடுவண் அரசின் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் தெளிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் வீட்டுமனை சந்தையைச் சரிப்படுத்தும் கொள்கை தொடர்ந்து வலுப்படுத்தப்படும். வீட்டுக் கடன் குறைக்கப்படுவது வளர்ச்சியின் முக்கிய கட்டமாகும் என்று கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. ஷாங்காய் மாநகரில், வணிக அலுவல் திட்டப்பணியின் ஒப்பந்தத்தை இணையத்தில் உருவாக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் நாள் முதல், தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து வணிக அலுவல் திட்டப்பணிகள் சரிப்பார்க்கப்படும் என்று ஷாங்காய் வீட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கமிட்டி தெரிவித்திருந்தது.

அண்மையில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு பணிக் கூட்டத்தில், வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையின் இருப்பைக் குறைப்பது மற்றும் அதன் நிலைப்புத் தன்மையை நிலைநிறுத்துவது ஆகியவை கவனத்தை ஈர்த்த முக்கிய வார்த்தைகளாகும். 2017ஆம் ஆண்டில் சீனாவின் வீட்டுமனை சந்தை பற்றி பொருளியலாளர் மா குவாங்யுவான் கருத்து தெரிவிக்கையில்—

"2017ஆம் ஆண்டு வீடு மற்றும் நிலச் சொத்து சந்தையில் கவனம் 2016ஆம் ஆண்டில் இருந்ததை விட குறையும். கடந்த ஆண்டு நிலச் சொத்து சந்தை மற்றும் வீட்டுமனை சந்தையின் பல தரவுகள் வரலாற்றில் புதிய உயர்வாகப் பதிவாகியுள்ளன. இவ்வாண்டில் சந்தையின் வர்த்தக அளவும் அதிகரிப்பு வேகமும் நிச்சயமாகக் குறையும். ஆனால் தீவிரமான தாழ்வு காணப்பட வாய்ப்பில்லை" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040