"புதிய நிலைமையில், வேளாண் துறையின் முக்கிய முரண்பாடு, மொத்த அளவு பற்றாக்குறையிலிருந்து கட்டமைப்பு தன்மையுடைய முரண்பாடாக மாறியுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தேவையை விட வினியோகம் அதிகமாக இருப்பதும், வினியோகப் பற்றாக்குறையாக இருப்பதும் ஒரே நேரத்தில் நிலவுகிறது. வேளாண் துறை வினியோக முறை சீர்திருதத்தை முன்னேற்றி, வேளாண் துறையின் பன்னோக்க பயன் மற்றும் போட்டியாற்றலை உயர்த்துவது, தற்போதைய மற்றும் அடுத்த காலக் கட்டத்தில் சீனாவின் வேளாண் துறை கொள்கை சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டுக்கான முக்கிய திசையாகும். இதனால், வேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தத்தை முன்னேற்றுவது, இந்த ஆவணத்தின் தலைப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அவர்.
வேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தம் குறித்து அவர் பேசுகையில், முதலில் வினியோகத்துக்கும் தேவைக்குமிடையேயான சரிசமத்தை விரைவுபடுத்தும் அதே வேளையில், தரத்தின் பயன் மற்றும் போட்டியாற்றலை உயர்த்துவதில் கவனம் செலுத்தி, வேளாண் துறையின் தொடரவல்ல வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். இரண்டு, உற்பத்தி கட்டமைப்பைச் சீர்படுத்துவதைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், உற்பத்தி பொருட்களின் கட்டமைப்பைச் சீர்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். மூன்று, அமைப்பு முறை சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தில் மேலும் கவனம் செலுத்தி, வேளாண் துறை மற்றும் கிராம வளர்ச்சிக்கான இயக்கு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, பயன்மிக்க வினியோகத்தை உத்தரவாதம் செய்வது, இச்சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய இலக்காகும். வினியோக அமைப்பு முறை மேம்பாடு, பயன் உயர்வு, விவசாயிகளின் வருமானம் மற்றும் நலன் அதிகரிப்பு ஆகியவை இச்சீர்திருத்தத்தின் வெற்றியை அளவீடு செய்யும் சின்னங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.