• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் வரி வருமானம் அதிகரிப்பு
  2017-02-09 17:02:49  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வரி வருமானம் 2012-ஆம் ஆண்டில் ஓராயிரம் கோடி யுவானைத் தாண்டிய நிலையில், 2016-ஆம் ஆண்டில் 2591 கோடியே 10இலட்சம் யுவானாக உயர்ந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட 31.9 விழுக்காடு அதிகம். அதன் அதிகரிப்பு வேகம் சீனாவின் முழுவதிலும் முதல் இடம் வகிக்கிறது. அது, திபெத்தின் பொருளாதாரம் மற்றும் வாழ்வுரிமை வளர்ச்சிக்கு நிதி உத்தரவாதம் அளிக்கவல்லது.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வரிவசூலிப்புத் துறைத் தலைவர் ஹு சூ ஹுவா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம், பத்து விழுக்காட்டுக்கும் மேல் என்ற நிலையில் விரைவாக அதிகரித்து வருகின்றது. வரிவசூலிப்பு மூலம் கிடைத்த வருமானத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் சீரான உறவு உள்ளது என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040