சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 10-ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மொத்த தொகை 2இலட்சத்து 18ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 19.6விழுக்காடு அதிகமாகும். அதன் அதிகரிப்பு அளவு, முந்தைய மதிப்பீட்டை விட மேலும் சிறப்பாகவுள்ளது. அமெரிக்க டாலரின் படி கணக்கிட்டால், ஜனவரி திங்களில் சீனாவின் ஏற்றுமதி தொகை, கடந்த ஆண்டின் ஜனவரி திங்களில் இருந்ததை விட 7.9விழுக்காடு அதிகரித்துள்ளது. அதோடு, கடந்த 9 திங்களில் தொடர்ந்து குறையும் நிலைமையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இவ்வாண்டில் சீன வெளிநாட்டு வர்த்தக நிலைமை, கடந்த ஆண்டை விட மேலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த ஆய்வு கழகத்தின் சர்வதேச சந்தை ஆய்வகத்தின் துணைத் தலைவர் பெய் மீங் கூறுகையில், ஜனவரி திங்கள் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பத்து விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரித்தது, சர்வதேச சந்தையின் மேம்பாடு, தேவை அதிகரிப்பு ஆகிய காரணிகளுடன் தொடர்புடையது என்றார். முதலில், சர்வதேச சந்தையில் விலை மீண்டும் உயர்ந்ததால், ஏராளமான வணிகப் பொருட்களை சீனா இறக்குமதி செய்யும் அளவு அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சீனப் பொருளாதாரத்தின் நிதானத்தை முன்னேற்றும் சில கொள்கைகள் பயன்களை ஏற்படுத்தியுள்ளதால், சர்வதேச சந்தைக்கான சீனாவின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இதுவும், சீனாவின் இறக்குமதி அதிகரிப்பை முன்னேற்றியது என்று பெய் மீங் கருத்து தெரிவித்தார்.
தவிர, சீனச் சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் துணைத் தலைமை பொருளியலாளர் சு ஹொங் ஸெய், சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி முறை மாற்றத்துடன் தொடர்புடையது. பொதுவாக, 2017-ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை, 2016-ஆம் ஆண்டை விட நன்காக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், சீனாவின் வசந்த விழாவினால் ஏற்பட்ட பயன்கள், சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முன்னதாகவே அதிகரித்ததற்கு உரிய காரணிகளுள் ஒன்றாகும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையில், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், சீனாவின் ஏற்றுமதி எதிர்நோக்கும் நிர்பந்தம் குறைக்கப்படக் கூடும் என்று கூறப்படுகின்றது.