காதலர் தினத்தின் போது, நகை கடைகள் மற்றும் பூக்கடைகளில் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கின்றது. பூக்கடைகளில், சிவப்பு ரோஜா, வெள்ளை ரோஜா மற்றும் லில்லி மலர் வகைகள் அதிகம் விற்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஜா மலர் வகைகளின் விலை அதிகம். இவற்றில் ஈக்வடோரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஜா மலர்கள் ஒரு கொத்து 1500 யுவான் என்னும் அளவில் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. காதலர் தினத்தில் மலர்களின் விலை, உச்ச நிலையை எட்டியுள்ளது.
பூக்கடைகளைத் தவிர, நகைக் கடைகளில், காதலர் தினத்துக்கான விற்பனை பரவல் மாதிரி துவங்கியுள்ளது. நுகர்வோரின் தனிநபர் தேவையை நிறைவு செய்யும் வகையில், பல கடைகள் காதலர் தினத்துக்கான சிறப்பு பாணி அலங்காரப் பொருட்களை வழங்குவதாக ஒரு கடையின் பணியாளர் தெரிவித்தார்.
பொழுதுபோக்கு இடங்கள், திரைப்பட அரங்கம் ஆகியவற்றில் சீன இளைஞர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். இவ்வாண்டின் காதலர் தினத்தில், சீனாவின் திரைப்படச் சந்தையில் அதிக திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதின் பல பரிந்துரைகளைப் பெற்றுள்ள லாலாலேண்ட் என்னும் திரைப்படமும், சீனாவின் காதல் திரைப்படங்களும் இவற்றில் இடம்பெறுகின்றன. இது குறித்து பெய்ஜிங்கில் உள்ள ஒரு திரைப்பட அரங்கத்தின் பணியாளரான சாவ் வென் யுவன் கூறியதாவது:
"காதலர் தினத்தில் நான் வேலை செய்யும் திரைப்பட அரங்கத்தின் திரைப்பட சீட்டுகளின் விலை மாற்றப்பட்டுள்ளது. விலை உயர்ந்தாலும், விற்பனை நன்றாக இருக்கிறது. நேற்று இரவு வரை 40 விழுக்காட்டு சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.
தவிர, சீனாவில் உள்ள பெரிய ரக பேரங்காடிகளில், காதலர் தினம் பற்றிய விளம்பரங்கள் அதிகம். பேரங்காடிகளில் உள்ள ஒப்பனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் காதலர் தினம் தொடர்பான பல்வகை பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை பரவலாகப் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் உள்ள ஒரு பேரங்காடி விற்பனை பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:
"காதலர் தினத்தின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு சீராகி வருகிறது. பொருட்களை வாங்குவது, நுகர்வோரின் பழக்க வழக்கமாக மாறியுள்ளது" என்றார் அவர்.