• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் 40 கோடி ஹெக்டர் உள்ள உயர் தரம் விளை நிலம்
  2017-02-16 11:27:58  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான சீனத் தேசிய நில மேலாண்மை வரைவுத் திட்டத்தைச் சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சகம் மற்றும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகியவை அண்மையில் வெளியிட்டன. 13வது ஐந்தாண்டு திட்டத்தின் போது, சீனா தேசியளவில், 4 கோடி ஹெக்டர் அளவிலான நிலப்பரப்பைத் தரம் மிக்க விளை நிலமாக சீனா கட்டியமைக்க வேண்டும் என்று இவ்வரைவுத் திட்டம் ஆலோசனை வழங்கியுள்ளது.


1999ஆம் ஆண்டில் நில மேலாண்மை சட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் நிலத்தைச் சீர்ப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் போது, 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான சீனத் தேசிய நில மேலாண்மை வரைவுத் திட்டத்தை இயற்றியது. அதன் பின் நில மேலாண்மை பற்றிய கண்ணோட்டம் படிப்படியாக தெளிவாக மாறியுள்ளது. கண்டிப்பான சாகுபடி நில பாதுகாப்பு மற்றும் நிலத்தின் சிக்கனப் பயன்பாட்டுக் பின்பற்றுவது என்ற அடிப்படையில், இவ்வாண்டில் இந்த புதிய வரைவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உயர் வரையறை வாய்ந்த விளை நிலத்தை கட்டியமைப்பதை விரைவுபடுத்தி, விளை நிலத்தின் அளவையும் தரத்தையும் முழுமையாக மேம்படுத்தி, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் கட்டுமான நில மேலாண்மை ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று, விளை நிலத்தை மீண்டும் பண்படுத்தி, நிலத்தின் இயற்கைச் சூழலை மேம்படுத்தி, நில சீர்திருத்த அமைப்புமுறை மற்றும் ஆற்றலின் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இவ்வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் தரமுள்ள விளை நிலக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது முதல் நோக்கமாகும் என்று சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சகத்தின் வரைவுப் பிரிவின் தலைவர் சுவாங் சௌ சின் அறிமுகப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது

நிலச் சீர்திருத்தத்தின் மூலம், ஒரு கோடியே 50 இலட்சம் முதல் 2 கோடி ஹெக்டர் விளை நிலைங்களை உருவாக்க வேண்டும். அடிப்படை விளை நிலத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், இத்தகைய விளை நிலத்தின் தரம் பொதுவாக ஒரு மடங்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.


இதற்கு முந்தைய விளை நிலப் பாதுகாப்பு என்ற அடிப்படையிலான கொள்கையை மாற்றுவது இவ்வரைவுத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக விரைவுபடுத்தி, குறிப்பாக, புதிய ரக நகர மயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும். புதிய கிராமப்புறங்கள்பன்முக, அடிப்படை மற்றும் நடைமுறையாக்கம் வாய்ந்த மேடையாக உருவாக்கப்பட வேண்டும் என்று சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சகத்தின் வரைவுப் பிரிவின் தலைவர் சுவாங் சௌ சின் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040