2015ஆம் ஆண்டு, அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு முறையை ஆழமாக்குவது பற்றிய செயல்பாட்டுத் திட்டத்தை சீனா வெளியிட்டது. 2020ஆம் ஆண்டுக்குள், அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு முறை சீர்திருத்தம் செய்யும் முக்கியத் துறைகளில் முன்னேற்றங்கள் அடைந்து, புத்தாக்க ரக நாடுகளின் வரிசையில் சீனா நுழைய வேண்டும் என்ற கருத்து இத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு முறை சீர்திருத்தம் ஆழமாக முன்னேறி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கக் கொள்கை மேலும் மேம்படுவதுடன், அறிவியல் தொழில் நுட்பக் கொள்கையிலிருந்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கக் கொள்கைக்கு மாறி வரும் போக்கு நடைபெற்று வருகிறது என்று ஹே தே ஃபங் தெரிவித்தார்.
அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளை வணிகமயமாக்குவதை விரைவுபடுத்துவது என்பது, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவது பற்றிய நெடுநோக்கு திட்டத்தின் முக்கிய கடமையாகும். இது, அறிவியல் தொழில் நுட்பமும் பொருளாதாரமும் நெருக்கமாக இணைவதை வலுபடுத்துவதற்கான முக்கிய சங்கிலியாகும். 12ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், தொடர்புடைய சட்டத்தையும், கொள்கைகளையும் சீனா வெளியிட்டுள்ளது. தற்போது, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளை வணிகமயமாக்குவது தொடர்பான அமைப்பு முறை பூர்வாங்க முறையில் உருவாகியுள்ளது என்று ஹே தே ஃபங் தெரிவித்தார்.
பல நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளை வணிகமயமாக்குவதில் பல்வேறு சமூகத் துறையினரின் ஊக்கம் பெரிதும் எழுப்பப்பட்டு, அறிவியல் தொழில் நுட்பம் மூலம் தொழில் நடத்தும் பேரெழுச்சி தோன்றியுள்ளது. அதே வேளையில், தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை ஆதரிக்க சலுகை கொள்கைகள் பலவற்றையும் சீனா வெளியிட்டுள்ளது.