பணி அனுபவம் அதிகமாகக் கொண்டுள்ள உள்ளூர் அதிகாரிகளின் பார்வையில், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹேபெய் இணைந்து வளர்வது, சீனாவின் புதிய பொருளாதார அதிகரிப்பு மையத்தின் உருவாக்கத்தை முன்னேற்றும். இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற 10 கோடிக்கும் மேலான மக்களின் அனுபவங்களில், தேசிய நெடுநோக்கு, அவர்களது போக்குவரத்து நீளத்தைக் குறைத்துள்ளது. அதோடு, அவர்களது வாழ்க்கைக்கு புதிய வசதிகளையும் இடைவிடாமல் அதிகரிக்கும் செல்வத்தையும் விளைவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பெய்ஜிங்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உரை நிகழ்த்துகையில், பெய்ஜிங், தியன்ஜின், ஹெபெய் ஆகியவை எல்லாம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெரும் தேசிய நெடுநோக்குத் திட்டத்தில் வைக்க வேண்டும் என்று முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெய்ஜிங் மாநகரம், தியன்ஜின் மாநகரம் மற்றும் ஹெபெய் மாநிலம் புதிய வளச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பெய்ஜிங்கில், நாட்டின் தலைநகர் தொடர்புடைய தொடர்பு இல்லாத வாரியங்களை குறைப்பது, மாநகரத்தின் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக பெய்ஜிங்கில் உள்ள சில தொழில்கள், தியன்ஜின் மற்றும் ஹெபெய்க்கு இடமாற்றப்பட்டுள்ளன. அதன் மூலமாக பெய்ஜிங்கில் காணப்படும் கூடுதலான இடங்களை எப்படி வரையரைத்து பயன்படுத்துவது என்பது மிகுந்த கவனத்தை ஈர்க்கிறது. இந்த இடங்கள், நடுவண் அரசு விவகாரங்களுக்கும் பொது சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பணியகத்தின் துணைத் தலைவர் வாங் ஹாய்சென் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவத ஒன்று, நாட்டின் பண்பாட்டு வசதிகளை அதிகரிப்பது, முக்கிய அரசுமுறை நிகழ்வுகளுக்கு இடம் அளிப்பது ஆகியற்றுக்கு காலிட இடங்கள் முன்னுரிமையுடன் அளிக்கப்படும். ஒன்று, உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையை மேம்படுத்தி, நகரத்தின் தரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும். மூன்று, பொது சேவையை இடைவிடாமல் அதிகரித்து, பொது மக்கள் மேலதிக நன்மை பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பெரிய பொருளாதார உயிராற்றல், உயர் வெளிநாட்டுத் திறப்பு அளவு, நல்ல புத்தாக்க திறமை, மிக அதிகமான மக்கள் தொகை ஆகியவற்றைக் கொண்டு வருகின்ற பிரதேசங்களில் ஒன்றானவும், சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆற்றலை தூண்டுவதானவும், பெய்ஜிங், தியன் சின், ஹொபெய் ஆகிய கூட்டு வளர்ச்சி தலைநகர் பொருளாதார மண்டலக் கட்டுமானத்தைத் தூண்டி, அனைத்து பெய் ஹெய் கடல் விரிகுடா பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் நன்மையை ஏற்படுத்தும்.