• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தொழிற்துறை இணையத்தின் வளர்ச்சி
  2017-02-22 14:01:47  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தொழிற்துறை இணைய மாநாடு அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. தற்போது சீனாவில் இத்துறை வேகமான வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ள போதிலும், ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆற்றல் குறைவு, ஒழுங்கற்ற வரையறைகள் ஆகிய பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்று இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, மந்தமான பொருளாதார வளர்ச்சி நிலைமையைச் சமாளித்து, புதிய சுற்று தொழிற்துறை புரட்சியை வரவேற்கும் வகையில், முன்னேறிய தயாரிப்புத் தொழிலை வளர்ப்பது பற்றிய தேசிய நெடுநோக்கு திட்டங்களை பல வளர்ந்து நாடுகள் அடுத்தடுத்து முன்வைத்து வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் வலுவான தயாரிப்பு ஆற்றல் கொண்ட நாடாக சீனா மாற வேண்டும் என்ற நெடுநோக்குத் திட்டத்தையும் சீனா முன்வைத்துள்ளது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியாவ் வெய் கூறியதாவது

பன்னாட்டு கண்ணோட்டத்துக்கு ஏற்ப, தொழிற்துறை இணையத்தின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவது, தயாரிப்புத் துறையையும் இணையத்தையும் இணைத்து வளர்த்து, தயாரிப்பு மற்றும் இணையத் துறையில் வல்லரசை நிறுவுவதற்கான நெடுநோக்கு தேர்வாகும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், இருப்புப் பாதை போக்குவரத்து, வண்டிகளின் உந்து விசை, மின்சார வாகனங்களின் உதிரி பாகங்கள், கண்ணாடி, விளையாட்டுப் பொம்மை, சீனப் பாரம்பரிய மருந்துகள், செல்லிடப்பேசி முதலிய துறைகளுடன் தொடர்பான தொழிற்துறை இணையம் சீராக வளர்ந்து வருகின்றது. தற்போது சீனத் தொழிற்துறை இணையத்தின் சந்தை மதிப்பு 3000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தத் துறை பிரச்சனைகளையும் அறைக்கூவல்களையும் எதிர்நோக்குகின்றது.

அவற்றில் முதலாவதாக, நுண்ணறிவு வசதிகளின் மைய உற்பத்தி தற்போது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் மட்டுமே இருப்பது. இராண்டாவதாக, இத்துறையில் சுய ஆய்வு மற்றும் வளர்ச்சி திறன் இன்னும் பக்குவம் அடையாதது. மூன்றாவதாக, பணிமனைக்கும் சாதனங்களுக்கம் இடையே ஒழுங்கான வரையறை இன்னும் கிடைக்காதது. நான்காவதாக, தொழில் நிறுவனங்களுக்கிடையில் அலுவல்களுக்கான வரையறையும் கணக்கு தீர்க்கும் வரையறையும் இன்னும் ஒன்றிணைக்கப்படாதது. ஐந்தாவதாக, தொழிற்துறை இணையத்துறையில் பாதுகாப்பு பிரச்சினை கவனிக்கத்தக்கது. இவை இத்துறையிலுள்ள பிரச்சினைகளும் அறைக்கூவல்களாகும்.

மேலும், தொழிற்துறை இணையம் பற்றி பன்னாடுகளுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனா விரும்புவதாக இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040