• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய சுற்று சீன-இந்திய தொலைநோக்கு பேச்சுவார்த்தை
  2017-02-23 11:16:45  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவும் இந்தியாவும் பெய்ஜிங்கில் புதிய சுற்று தொலைநோக்கு பேச்சுவார்த்தையை புதன்கிழமை துவங்கின. சீனத் துணை வெளியுறவு அமைச்சர் ட்சாங் யேசுய், இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு மே திங்கள் இந்திய தலைமை அமைச்சராகப் பதவி ஏற்ற பின் இரு நாடுகள் நடத்தும் முதலாவது தொலைநோக்கு பேச்சுவார்த்தை இதுவாகும். இரு நாட்டுறவை வளர்ப்பதில் இரு நாடுகளின் தலைவர்கள் மிகவும் கவனம் செலுத்தி வருவதை இது காட்டுகின்றது. இரு நாடுகளும் திறந்த மனத்துடன் பரந்தளவில் பயன் தரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இவ்வாண்டின் துவக்கத்தில் தில்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற சிந்தனை கிடங்கு அமைப்புகளின் ஆய்வுக் கூட்டங்களில், பல இந்திய பிரமுகர்கள் தெரிவித்தனர். இதனிடையில், இத்தகைய பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கிடையே அரசியல் நம்பிக்கையை அதிகரித்து பொது கருத்தை விரிவாக்கி, சீன-இந்திய தொலைநோக்கு கூட்டாளியுறவை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று சீனா விரும்புகின்றது.

நடப்பு பேச்சுவார்த்தையில், முரண்பாடுகள் பற்றிய விவாதத்தை இரு தரப்புகளும் தவிர்க்கவில்லை. அணு விநியோக குழு உள்ளிட்ட சில கடும் கருத்துவேற்றுமைகளைக் கொண்ட பிரச்சினைகள் இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஸ்வாலுப் கூறினார். பேச்சுவாத்தையில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பான சீன தரப்பின் நிலைப்பாட்டை சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்துள்ளார். பல பிரச்சினைகள் இரு தரப்புகளுக்கும் இடையிலானது அல்ல. அது பல தரப்பு பிரச்சினைகளாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் நல்லெண்ணத்தைக் காட்டுகின்றன. கருத்துவேற்றுமைகளைக் கூடிய அளவில் குறைத்து, ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி புதிய ஒத்த கருத்துக்களை உருவாக்க இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன என்று கெங் சுவாங் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சில பிரச்சினைகள் பற்றி கருத்துவேற்றுமைகள் நிலவுவது இயல்பே. இந்தக் இகனை எப்படி சமாளிப்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது, இத்தகைய கருத்துவேற்றுமைகளை விட சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொது நலன்கள் அதிகமாகும். ஒரே பேச்சுவார்த்தை மூலம் அனைத்து கருத்துவேற்றுமைகளையும் தீர்க்க முடியாது. ஆனால், இத்தகைய தொலைநோக்கு பரிமாற்றத்தை அதிகமாக மேற்கொள்வது, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சிக்குத் துணை புரியும் என்பது உறுதி.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040