பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறை, புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான தலைச்சிறந்த மாதிரியாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிபரங்களின்படி, உலக பொருளாதார அதிகரிப்பில் பிரிக்ஸ் நாடுகள் உட்பட புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பங்கு 80 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உலக பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 50 விழுக்காட்டுக்கு மேலாகும். அதேவேளையில், உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இன்னும் வலுவற்ற நிலையில் உள்ளது. அதன் உலக மயமாக்கப் போக்கில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. தவிர, உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் உறுதியற்ற அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பேசுகையில், சிக்கலான சூழ்நிலையைச் சமாளிக்கும் போது, பிரிக்ஸ் நாடுகள் நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரிக்ஸ் நாடுகள், உலக மேலாண்மையின் பங்கெடுப்பாளர் என்ற நிலையிலிருந்து வழிக்காட்டியாக மாறி வருகின்றன. உலக அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கான கடமையையும் அதற்கான திறமையையும் பிரிக்ஸ் நாடுகல் கொண்டுள்ளன. உலக மேலாண்மையில் பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து ஆராய்ந்து கூட்டு வெற்றி பெறும் வகையில் புதிய வழிமுறையைக் கட்டியமைக்க வேண்டும் என்று யாங் ச்சியேச்சி கூறினார்.
பிரிக்ஸ் கூட்டாளியுறவை ஆழமாக்கி, மேலும் ஒளிமயமான எதிர்காலத்தைத் திறந்து வைப்போம் என்பது நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும். பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்களும், சீனாவுக்கான அவற்றின் தூதாண்மை அதிகாரிகளும், புதிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகளும் இந்தத் தலைப்பு பற்றியும், தற்கால சர்வதேச நிலைமை பற்றியும் இக்கூட்டத்தில் விவாதித்தனர்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அதிகரிப்பு என மேலும் பரந்த அளவில் சீனா தலைமை பங்கு ஆற்ற முடியும் என்று ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சர் லியாபுகொவ் கூறியுள்ளார். சீனத் தலைவர்கள் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு சீனா மேலும் சிறப்பான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்று நம்புவதாக அவர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.