• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் கொரிய அரசுத் தலைவர் மீதான் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பான பேரணிகள்
  2017-02-26 18:10:22  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் கொரிய அரசியல் அமைப்புச் சட்ட நீதி மன்றம், அரசுத் தலைவர் பாக் கியூன் ஹை மீது தொடுத்துள்ள குற்றச்சாட்டு வழக்குத் தொடர்பான இறுதிகட்ட நீதிமன்ற விசாரணை நாள் நெருங்கி வரும் வேளையில், பாக் கியூன் ஹையின் எதிர்ப்பாளர்களும், அவரின் ஆதரவாளர்களும், 25ஆம் நாள் பெருமளவிலான பேரணிகளை நடத்தினர்.
பாக் கியுன் ஹை பதவி விலகக் கோரி, அரசியல் அமைப்புச் சட்ட நீதி மன்றம் வெகுவிரைவில் இவ்விசாரணை செய்ய வேண்டும் என பாக் கியூன் ஹையின் எதிர்ப்பாளர்கள் அந்நாட்டின் தலைநகர் சியோலில் 17ஆவது முறை நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் வேண்டுகோள் விடுத்தனர். 25-ஆம் நாள் இரவு 8மணி வரை, சுமார் 8இலட்சம் பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர் என்று இப்பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
தவிர, அதே நாளின் பிற்பகல் வரை, சுமார் 30இலட்சம் பேர், பாக் கியூன் ஹைக்கு ஆதரவு அளிக்கும் பேரணியில் கலந்துகொண்டனர் என்று இப்பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையில், இரு தரப்பு பேரணிகளிலும் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளை, அந்நாட்டின் காவற்துறை வெளியிடவில்லை. இரு தரப்புகளுமிடையே கடும் மோதல் நிகழவில்லை என்று தெரிய வந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040