அண்மையில், சீனாவின் மூலதன சந்தைக்கான கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பணியகம், கண்டிப்பான முறையில் மூலதனச் சந்தையை நிர்வகிப்பது பற்றிய செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இது பற்றி லியூ ஷி யு கூறுகையில், 2016-ஆம் ஆண்டில், பரந்துபட்ட முதலீட்டாளர்களின் கூட்டு கவனத்தினால், சீனாவின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளிலும் காணப்பட்ட ஏற்ற இறக்க அளவு குறைந்தது. இதனால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்ததோடு, பங்குச் சந்தையின் செயல்பாடும் சீராக இருந்தது என்றார்.
புதிய பங்கு பத்திரங்களை வினியோகிப்பது பற்றிய சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகத்தின் கண்ணோட்டம் குறித்து, லியூ ஷி யு விரிவான முறையில் விளக்கிக் கூறினார். மூலதனச் சந்தை நீண்டகாலமாக வளர்வதை நிலைநிறுத்துவதற்காக, புதிய நிறுவனங்கள் இச்சந்தையில் பங்கெடுப்பது இன்றியமையாதது. புதிய நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கத் தொடங்கிய பிறகு, மூலதன சந்தையில் பணமாற்று சுழற்சி அளவு அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து, மேலும் அதிகமான முதலீட்டு தொகை அதிகரிக்கப்பட்டு, முழு சமூகத்தின் நம்பிக்கயும் வலுவடையும் என்று லியூ ஷி யு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், சீனா வளர்ந்து வரும் பெரிய நாடாகும். புதுமை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள், பங்கு பத்திரச் சந்தையில் நுழைவதற்கு விண்ணப்பிக்கும். இது நன்மை தரும் ஒன்றாகும். சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றலை இது வெளிப்படுத்தும். சீனாவின் மூலதன சந்தையை வளர்க்கும் ஊற்று மூலமாக இதுவும் விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டார்.
தவிர, சட்டப்படி கண்டிப்பான முறையில் நிர்வகிப்பது பற்றிய கண்ணோட்டம், கடந்த ஆண்டு முதல் மூலதன சந்தைச் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு செய்தியாளர் கூட்டத்தில் லியூ ஷி யு பேசுகையில், கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் மூலம் மட்டுமே, வெளிப்படையான நியாயமான சந்தை ஒழுங்கைப் பேணிகாக்க முடியும். வெளிப்படை மற்றும் நியாயம் ஆகிய கொள்கைகளைச் செயல்படுத்தினால் தான், முதலீட்டாளர்களின் உரிமை நலன்கள் பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்யப்பட முடியும் என்றும் குறிப்பிட்டார்.