• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு இரண்டுக் கூட்டத் தொடர்கள் மீது எதிர்பார்ப்பு
  2017-03-01 15:25:17  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருளாதாரம் மந்தமாக வளர்ந்து வரும் நிலையிலும், சீனா, உலகப் பொருளாதார அதிகரிப்பின் முதலாவது உந்து சக்தியாக மாறியுள்ள நிலையிலும், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத் தொடர்கள், பல்வேறு தரப்புகளின் கவனங்களை ஈர்க்கின்றன. இதில், சந்தையின் விநியோகம் என்ற பக்கத்திலான சீர்திருத்தம், நிதித் துறை இடர்பாட்டின் தடுப்பு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் உள்ளிட்ட பிரச்சினைகள் இவ்வாண்டு கூட்டத் தொடர்களில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

கூட்டத் தொடர்களில் புதிய ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு பற்றிய இலக்கு என்ற தகவலை வெளியிடுவது வழக்கமாகும். இது, மிகுந்த கவனத்தை ஈர்க்கும். முன்னதாக, உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் 2017ம் ஆண்டுக்கான சீன பொருளாதார வளரச்சி விகிதத்தை 6.5ஆக மதிப்பீடு செய்துள்ளன. இது பற்றி சீனாவின் சியாமன் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த பொருளியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் லு செங்ரொங் பேசுகையில், இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சியில் அழுத்தம் இன்னும் நிலவுகிறது. ஆனால், வளர்ச்சி வேகம் குறையும் அளவு மேலும் குறுகியதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

சந்தை விநியோகம் என்ற பக்கத்திலான சீர்திருத்தம் 2017ஆம் ஆண்டு மேலும் ஆழமாக மேற்கொள்ளப்படும். இதனிடையில், தொழில் நிறுவனங்களின் சுமைகளைக் குறைப்பது, உண்மைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை சுற்றி, வரும் கூட்டத் தொடர்களில் ஆலோசனைகள் முன்வைக்கப்படும்.

மேலும், நிதி இடர்பாட்டை கட்டுப்படுத்தி தடுக்கவும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையை உருவாக்குவதை விரைவுப்படுத்தவும், அமைப்புமுறை ரீதியான இடர்பாட்டை தடுக்கவும் வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற சீனாவின் மத்திய நிதித் தலைமைக் குழுக் கூட்டத்தில் தெளிவாக முன்மொழியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனத் தேசிய பொருளாதார பரிமாற்ற மையத்தின் தகவல் பிரிவுத் தலைவர் வாங்ஜுன் கூறுகையில், நிதித் துறையில் இடர்பாடு ஏற்படாமல் தடுப்பது கூட்டத் தொடர்களில் முதல்இடத்தில் வைக்கப்பட்டு முக்கியமாக விவாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார்.

இவற்றைத் தவிரவும், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய கருத்தரங்கு மே திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என முன்மொழிவு, சீனா மற்றும் ஆசியாவின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் கூட்டத் தொடர்களில் விவாதிக்கப்படும் குவிய அம்சமாகும் என்று அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.

உலகமயமாக்கத்துக்கு எதிரான நிலை எழுந்து வரும் பின்னணியில், ஆசிய நாடுகள் ஒத்துழைப்புடன், உலகின் உறுதியற்ற இடர்பாடுகளை தடுக்க வேண்டும் என்று சீன சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் துணை ஆளுநர் வெய்ஜியாங்கோ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

மே திங்கள் நடைபெறும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய கருத்தரங்கில் ஆசிய அடிப்படை வசதிகளின் ஒன்றிணைப்பை முன்னெடுக்கவும், நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்காவும், ஆசியப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை ஊட்டவும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040