2017ஆம் ஆண்டு உலக மொபைல் காங்கிரஸ் எனும் மாநாடு மார்ச் 2ஆம் நாள் நிறைவு பெற்றது. 5ஜி என அழைக்கப்படும் 5ஆவது தலைமுறை நடமாடும் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தின் பயன்பாடு எதிர்பார்க்கத்தக்கது. 5ஜி தொழில் நுட்பம், 4ஆவது தொழில் புரட்சியை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக மாறக் கூடும் என்று கருதப்படுகிறது.
5ஜி தொலைத் தொடர்பு தொழில் நுட்ப விபரங்களின் வரையறை 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அடுத்த 10 ஆண்டுகளில், 5ஜி தொலைத் தொடர்பு வலையமைப்புகள் பெருமளவில் பரவச் செய்யப்படும். 2025ஆம் ஆண்டு வரை, உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களை 5ஜி தொலைத் தொடர்புச் சேவை இணைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.