2017ஆம் ஆண்டு சீனாவின் தேசிய பாதுகாப்புக்கான செலவு சுமார் 7 விழுக்காடு அதிகரிக்கும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் நடப்புக் கூட்டத் தொடருக்கான செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் அம்மையார் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு செலவில் ராணுவ வீரர்களின் வாழ்க்கை, பயிற்சி, ராணுவ தளவாடங்கள் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ராணுவத்துக்கான ஒதுக்கப்படும் நிதி வகிக்கும் விகிதம் சராசரியாக 1.32 விழுக்காடாகும். உலகளவில் உள்ள 2.4 விழுக்காடு என்ற நிலையை இது மிகவும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.