டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டிடே, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் முதலிய செய்தி ஊடகங்கள், இவ்வாண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீட்டின் அதிகரிப்பு மீது அதிகமான கவனம் செலுத்தியுள்ளன. 2017ஆம் ஆண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீடு 7 விழுக்காடாக அதிகரிக்கப்படும். இது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு 10 விழுக்காடு என்பதிலிருந்து, தெளிவாக மாறுபடுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு இரு கூட்டத்தொடர்களின் கண்ணோட்டமும், பொருளாதாரத் துறையின் மீது தான் உள்ளது. சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் வழங்கிய அரசு பணியறிக்கையில், 2016ஆம் ஆண்டு சீன பொருளாதார அதிகரிப்பு வேகத்தை அறிவித்ததோடு, 2017ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சித் திட்டத்தையும் வெளிக்காட்டியுள்ளது. இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியில் அறிவித்ததாக டி ஹிந்துஸ்தன் டைம்ஸ், சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பொருளாதாரத்தில் முக்கியமாக கவனம் செலுத்தும் என்னும் கட்டுரையில் கூறியுள்ளது.