• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் குடிமையியல் உரிமை பாதுகாப்பு
  2017-03-06 10:50:23  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தொடங்கியது. சீனக் குடிமையியல் சட்டத்துக்கான பொது வரைவுத் தீர்மானத்தைப் பரிசீலனை செய்வது இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும். அரசு சாரா துறையினர்களும் இதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு, சீனக் குடிமையியல் சட்டத்தினை இயற்றுவதை முதல் நிலையில் வைத்து திருநத்து. அப்போது முதல் இது வரை, சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இச்சட்டத்தின் வரைவுத் தீர்மானம், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியில் மூன்று முறை பரிசீலனை செய்யப்பட்டது. அதோடு, இது தொடர்பாக சமூகத்தில் பல முறை கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவ்வாண்டில், சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் ஏறக்குறைய 2900 பிரதிநிதிகள் இவ்வரைவுத் தீர்மானத்தைப் பரிசீலனை செய்கின்றனர்.பொதுத் துறை சட்டத்திற்கான நிபுணர் சுன் சியன் சொங், 2013ஆம் ஆண்டில், சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரை, ஆண்டுதோறும், இத்தீர்மானம் தொடர்புடைய கருத்துருக்களையும் ஆலோசனைகளையும் அவர் வழங்கி வருகின்றார். கடந்த 4 ஆண்டுகளில், மொத்தமான 16 கருத்துருக்களை அவர் முன்வைத்துள்ளார். அவரின் கருத்துக்களின்படி, குடிமையியல் இயற்றப்படுவது மிகவும் அசவரமானது. அவர் கூறியதாவது
சீனாவில் தற்போதைய குடிமையியல் சட்டம், 1986ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சீனாவில் திட்டமிட்ட பொருளாதார அமைப்புமுறையை சீனா செயல்படுத்தியதை அப்போதைய சீன அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியது. 1992ஆம் ஆண்டில், சீனாவில் சந்தை பொருளாதார அமைப்புமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது முதல், ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை அமைப்புமுறை நிலவியது. அப்போது, குடிமையியல் சட்டத்தில் பல விதிகளை பயன்படுத்த முடியாது. மக்கள் பேரவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நான் பல முறை சமூக்க் கள ஆய்வு செய்துள்ளேன். இச்சட்டத்தின் சுமார் 156 விதிகளில் பத்துக்கும் அதிகமான விதிக்களை மட்டுமே இப்போது பயன்படுத்த முடியும். பொருளாதார வாழ்க்கையுடன் தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
குடிமையியல் சட்டம் பொதுவாக சமூக வாழ்க்கைக்கான கலைக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இச்சட்டம், மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது. இவ்வாண்டில் முன்வைக்கப்பட்ட இவ்வரைவுத் தீர்மானத்தில் மொத்தமாக 11 தொகுதிகள் இருக்கின்றன. குடிமையியல் அடிப்படைக் கொள்கை, குடிமையியல் உரிமை, குடிமையியல் கடமைகள் முதலியவை இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040