சீனாவில் கைப்பேசித் தொடர்புக்கான உள்நாட்டுத் தொலைதூரக் கட்டணம் மற்றும் ரோமிங் கட்டணம் 2017ம் ஆண்டுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சர்வதேச தொலைதூரக் கட்டணம் குறைக்கப்படும். மேலும், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் இணைய சேவை பெறும் கட்டணமும் அதிகளவில் குறைக்கப்படும்.
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் மார்ச் 5ஆம் நாள் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் அரசுப் பணியறிக்கையை தாக்கல் செய்தபோது இதை தெரிவித்தார்.