2016ஆம் ஆண்டு சீன குடிமக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் ஏழ்மையானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 24 லட்சம் குறைந்துள்ளது என்று சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது மிகச்சிறந்த சாதனையாகும். மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஏழை மக்கள் இல்லாத நிலையை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. இது உலகளவில் அரிதான அருஞ்செயலாகும் என்று இந்தியாவின் பப்ளிக் நியூஸ் செய்தியேட்டின் தலைமை பதிப்பாசிரியர் பிரவீண் குப்தா சீன வானொலியின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு பணியில் சீனா பெற்றுள்ள சாதனை, அனைத்து வளரும் நாடுகளுக்கும் பெரிய ஊக்கமாகும். தவிரவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் சீனாவின் ஊழல் ஒழிப்பு வலுவடைந்து வருகிறது. இத்துறையில் சீனா பெற்றுள்ள அனுபவங்கள், இந்தியா கற்றுக்கொள்ளத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார்.