• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுப் பணியறிக்கையில் புதிய வாழ்வுரிமை கொள்கைகள்
  2017-03-07 15:11:51  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாட்சி அறிக்கை, சுமார் 3000 தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளால் பரிசீலனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. சுமார் 20ஆயிரம் எழுத்துக்கள் கொண்ட இந்த அரசு பணியறிக்கையில், பொது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு துறைகள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வுரிமை, விநியோக முறை சீர்திருத்தம் உள்ளிட்ட 9 முக்கிய துறைகளுடன் தொடர்புடைய அம்சங்கள் மிகவும் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக, மகிழ்ச்சி அடைவதாக என்று பல பிரதிநிதிகள் பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தவிர, இவ்வாண்ல் நகரங்களில் ஒரு கோடியே 10இலட்த்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது என்பது, நடுவண் அரசின் நோக்கமாகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு இலட்சம் அதிகம். வேலை வாய்ப்பைப் பெறுவதில் அரசு அதிகமாக கவனம் செலுத்துவதை இது எடுத்துக்காட்டியுள்ளது.

வேலை வாய்ப்பைப் பெறுதலை உத்தரவாதம் செய்வது தொடர்பாக, சீனச் சமூக அறிவியல் கழகத்தினைச் சேர்ந்த ட்சாங் யுன் லீங் கூறுகையில், தற்போது பொருளாதார அதிகரிப்பு மந்தமாக இருக்கிறது. கட்டமைப்புச் சீர்திருத்தம், அளவுக்கு மீறி உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை மூடுவது முதலியவை, வேலைவாய்ப்பின்மை விகிதத்தை அதிகரிக்கும். இந்நிலைமையில், வேலை வாய்ப்பு பெறுவதை உத்தரவாதம் செய்வது மற்றும் வறுமை ஒழிப்பு கொள்கை அரசு முக்கிய இடத்தில் வைத்திருப்பது தெளிவாகியுள்ளது என்றார்.

தவிரவும், கல்வித் தரம் மற்றும் நியாயத்தை உத்தரவாதம் செய்வது, ஆண்டுதோறும் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டத் தொடரில் அதிகமாக்க் கவனம் செலுத்தப்படும் அம்சமாகும்.

பல்வேறு இடங்களின் தன்மைக்கேற்ப கல்வி நிலைமையில் காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் வகையில், சீன நடுவண் அரசு கல்வி தரம் பலவீனமாக இருக்கும் பள்ளிகளின் நிலைமையை தொடர்ந்து மேம்படுத்தி, சிறந்த கல்வி மூலவளப் பரவலை மேலும் அதிகமாக விரிவாக்க பாடுபட்டு வருகின்றது என்று அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து வந்த மக்கள் பேரவைப் பிரதிநிதி கு லி நுல். மை மை தி கூறுகையில், தற்போது, சீனாவின் மேலை பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்கும் இடையே, புத்தாக்கம், புத்திசாலி தொழில் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் சில இடைவெளி இருந்தபோதும், கல்வி தகவல்மயமாக்கம், கல்வி ஒதுக்கீடு, கல்வி நியாயம் ஆகிய மூன்று துறைகளில் இருக்கும் இடைவெளி குறைந்து வருகின்றது என்றார். மேலும், இந்த அரசுப் பணியறிக்கையில், ஒவ்வொரு குறிப்பிட்ட வயது கொண்டவரும் நியாயமான முறையில் கல்வி வாய்ப்பைப் பெறுவது பற்றிய அம்சங்கள் மிகவும் நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040