• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு பற்றிய செய்தியாளர் கூட்டம்
  2017-03-10 14:24:17  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத்தொடர் 9ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் சேன் ஜி நிங் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து சீன மற்றும் அந்நிய நாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, காற்று மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செயல் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, சீனாவின் காற்றுத் தர மேம்பாடு ஆக்கப்பூர்வ பயன்களைப் பெற்றுள்ளது என்றும், இவ்வாண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சட்ட அமலாக்க அளவைத் தொடர்ந்து வலுப்படுத்தி, காற்று, நீர் மற்றும் மண் மாசுபாட்டைப் பெரிதும் கட்டுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு, ஆண்டுதோறும் சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் நடைபெறும் போது செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்தும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். காற்று மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செயல் திட்டம் நடைமுறைக்கு வந்து, 3 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும், 2016ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில், சீனாவின் பல இடங்களில், கடும் மாசுபாடு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் பெறப்பட்டுள்ளதா? இல்லையா?என்பதில் சிலர் ஐயம் கொண்டுள்ளனர். மாசுபாட்டுப் பொருட்களின் வெளியேற்றம், வானிலை ஆகிய இரண்டு காரணிகளால் காற்று மாசுபாட்டுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. உலகளவில் பொதுவாக பயன்படும் வரையறைக்கிணங்க மதிப்பிட்டால், சீனாவின் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு பயன்மிக்கது என்று சேன் ஜி நிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"2016ஆம் ஆண்டு பெய்ஜிங் மாநகரின் பி.எம்.2.5 துகள் சராசரி செறிவு, கன மீட்டர் ஒன்றுக்கு 73 மில்லி கிராம் ஆகும். இது 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட 18 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் 74 முக்கிய நகரங்களில், பி.எம். 2.5 துகள் சராசரி செறிவு, கன மீட்டர் ஒன்றுக்கு 50 மில்லி கிராம் ஆகும். இது 2013ஆம் ஆண்டில் இருந்ததை விட 30.6 விழுக்காடு குறைந்துள்ளது. அதே வேளையில், காற்று தரம் நல்லதாக இருக்கும் நாட்கள் அதிகரித்துள்ளன. கடும் மாசுபாட்டு வானிலை ஏற்படுவது தெள்ளத்தெளிவாக குறைந்துள்ளது" என்றார் அவர்.

சாதனைகளைப் பெற்றுள்ள போதிலும்,காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டில் இப்போதும் சில பிரச்சினைகள் நிலவுகின்றன. பெய்ஜிங், தியன் ஜின், ஹேபெய் மாநிலம் ஆகிய பிரதேசங்களில், குளிர்காலத்தில் வெப்ப வசதிகளைப் பயன்படுத்தும் போது மாசுபாட்டு நிலைமையின் மேம்பாடு தெளிவாக இல்லை. தவிர, பி.எம். 2.5 துகள் உருவாகும் காரணிகள் அதிகமாக இருப்பதால், பல்வேறு இடங்களின் பன்முக கட்டுப்பாட்டுக்கு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில், குளிர்காலத்தில் வெப்ப வசதிகளுக்கு ஏற்பாடு செய்து, மாசுபாட்டு தடுப்பு அளவை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. பி.எம் 2.5 துகள் உருவாவதற்கான காரணங்கள் மீதான ஆராய்ச்சிப் பணிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் வலுப்படுத்தி, மாசுபாட்டைச் சீரான முறையில் கட்டுப்படுத்துவதற்கு வழிகாட்டும் என்று சேன் ஜி நிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040