உதாரணத்துக்கு, நாடுகளிடையேயான பரிமாற்றம் மற்றும் பயன்கள் ஆகியவற்றுக்காக ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனாவின் விருப்பம்; சர்வதேச அமைதி, நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பதென்ற சீனாவின் முடிவு; கொரிய தீபகற்பத்தில் சுமூக நிலைக்கான தீர்வுகள் என பல கருத்தை வாங் யி குறிப்பிட்டார்.
உலகமயமாக்கலின் சூழலில் தற்போதைய நிலைமை உள்ளது. ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வொரு நாடும் பல நாடுகளைச் சார்ந்துதான் தங்களது பொருளாதார நகர்வுக்கான திட்டத்தை வகுக்கின்றன. நாடுகளிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைதான் நிரந்தரத் தீர்வு என்பது கடந்த கால சம்பவங்களும், நிகழ்கால சம்பவங்களும் உணர்த்தி வருகின்றன. சமீபத்தில், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பிலிப்பைன்ஸ் ஆமோதித்தது.
ஆகவே, சீனாவின் முந்தைய செயல்பாடுகள் மற்றும் வாங் யியின் சமீபத்திய கூற்றுகள், மறைமுகமாக இந்திய-அமெரிக்க நிபுணர்களுக்குக் கூறுவது என்னவென்றால் 'நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். நம்மிடையே காழ்ப்புணர்ச்சி கூடாது, ஒருவரையொருவர் அரவணைத்து முன்னேறுவோம் என்பதுதான்.'