சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் 12ஆம் நாள் பிற்பகல் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரில் விடுதலை படை பிரதிநிதிகளின் குழு விவாதத்தில் கலந்து கொண்டார்.
அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன், நாட்டின் உத்திநோக்கு போட்டியாற்றல், சமூக உற்பத்தியாற்றல், படையின் போட்டியாற்றல் ஆகியவற்றுக்கிடையிலான உறவும் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
அறிவியல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி சீனப் படையின் வளர்ச்சிக்கு மாபெரும் உதவி அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.