தென் கொரியாவும் அமெரிக்காவும் 13ஆம் நாள் முக்கிய கீ ரிசால்வ் என்ற கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தின. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது, கொரிய தீபகற்ப நிலைமை அதிக பட்ச அழுத்த நிலையில் இருக்கின்றது. தொடர்புடைய தரப்புகள் தீபகற்ப நிலைமையைத் தணிவித்து, இப்பிரதேசத்தின் அமைதி நிதானத்தை பேணிக்காக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் ஹொ சுன் யீங் தெரிவித்தார்.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை, போர் நிறுத்த முறையை அமைதி முறையாக மாற்றுவது ஆகிய இரு கொள்கைகளின் அடிபடையில் கொரிய தீபகற்ப பிரச்சினையை தீர்ப்பது ஊன்றி நிற்க வேண்டும் என்று 12வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடரில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறினார். வட கொரியா அணு ஏவுகணை பரி சோதனையை தற்காலிகமாக நிறுத்துவது, அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு ராணுவ பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவது ஆகிய முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார்.(மோகன்)