ஷிச்சின்பீங் பேசுகையில், ஓரளவு வசதியான வாழ்க்கை பன்முகங்களிலும் நனவாக்கப்படுவதில், அனைத்து தேசிய இனங்களும் அடங்கும். 2020ஆம் ஆண்டுக்குள் வறிய மக்கள் முற்றிலும் வறுமையிலிருந்து விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டினால், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பிரச்சினையில் சீனா கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
சீன அரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய இன ஒற்றுமை மற்றும் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சிப் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, பிரதேச வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டுடன் தொடர்புடைய அதிகமான மீட்புதவித் திட்டப்பணிகள் திபெத்தில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. இவை, பழைய திபெத்தை உயிர்ப்பு ஆற்றல் வாய்ந்த புதிய திபெத்தாக மாற்றியுள்ளன என்று பங்காஜ் ஸ்ரீவஸ்டாவா கூறினார். (ஜெயா)