12ஆம் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் 15ஆம் நாள் குடிமையியல் சட்டத்தின் பொது கோட்பாடுகள், பிரதிநிகளின் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சீனாவின் சட்டமியற்றல் வரலாற்றில் மைல் கல் போன்று முக்கியத்துவம் வாய்ந்த குடிமையியல் சட்டத் தொகுப்பின் முதல் பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2838 பிரதிநிதிகள் 15ஆம் நாள் காலை நடைபெற்ற இந்த ஆண்டுக் கூட்டத் தொடரின் நிறைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். குடிமையியல் சட்டத்தின் பொது கோட்பாடுகளுக்கு, 2782 பிரதிநிதிகள் ஆதரவாகவும், 30 பிரதிநிதிகள் எதிராகவும் வாக்களித்தனர்.
சீன குடிமுறை செயல்களுக்கான அடிப்படை மற்றும் பொது விதிகள், குடிமையியல் சட்டத்தின் பொது கோட்பாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் குடிமையியல் சட்டத் தொகுதி உருவாக்கப்படும் வகையில், அதன் பல்வேறு பகுதிகளை இயற்றும் பணிகள் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (வான்மதி)