12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி, 15ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நிறைவுற்றது. தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் ச்சாங் டேஜியாங் நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நடப்பு கூட்டத் தொடரில், அரசுப் பணியறிக்கை, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 66ஆவது அரசுத் தலைவர் உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு குடிமையியல் சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. 13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கான இடங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான தீர்மானம் உள்ளிட்ட ஆவணங்கள் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.(வான்மதி)