இவ்வாண்டு சீனப் பொருளாதாரம் 6.5 விழுக்காட்டளவில் அதிகரிக்கும். இந்த வளர்ச்சி வேகம் சரியான நிலையில் உள்ளது. இந்த இலக்கு பொருளாதார விதிகளுக்குப் பொருந்தியது. உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா ஆற்றும் பங்கு குறையாமல் இருக்கும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 15ஆம் நாள் தெரிவித்தார்.
மேலும், சீன நிதி அமைப்பு முறையின் ஒட்டுமொத்த நிலை பாதுகாப்பாக உள்ளது. முறைமை சார் இடர்ப்பாடு ஏற்படாது என்றும் அவர் உறுதி கூறினார்.(வான்மதி)