• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் முடிவு
  2017-03-15 15:09:15  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் 15ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் இனிதே நிறைவடைந்தது. ஷி ச்சின்பீங் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். அரசு பணியறிக்கை, குடிமையியல் சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள் ஆகியவை வாக்கெடுப்பு மூலம் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாங் தேச்சியாங் நிறைவு விழாவில் கூறியதாவது
சீராகவும் நிதானமாகவும் முன்னேறுவது எமது பணியின் முக்கிய அம்சமாகும். புதிய வளர்ச்சி என்ற கருத்தைக் கொண்டு, மக்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்துவதில் ஊன்றி நிற்கின்றோம். பொருளாதாரத்தின் நிதானமான சீரான வளர்ச்சியையும் சமூகத்தின் அமைதி மற்றும் இணக்கத்தையும் முன்னேற்றுவதில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அவர் கூறினார்.
குடிமையியல் சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள் பற்றி அவர் கூறியதாவது
குடிமையியல் சட்டத் தொகுப்பை இயற்றுவது பரந்த மக்களின் எதிர்பார்ப்பின்படி செயல்படுத்தப்படும் முக்கிய சட்டமியற்றல் பணியாகும். குடிமையியல் சட்டத்துக்கான பொதுக் கோட்பாடுகள் இந்தச் சட்டத் தொகுப்புக்கு துவக்குகும் பகுதியாகும். பன்முகங்களிலும் சட்டப்படி நாட்டை ஆள்வது என்ற கோரிக்கையின்படி சீனாவில் குடிமுறை செயல்பாடுகள் தொடர்பான அடிப்படை விதிகள் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு சீனத் தனிச்சிறப்புடைய குடிமையியல் சட்டத் தொகுப்பை தற்காலத்துக்கும் மக்களின் விருப்பத்துக்கும் ஏற்ற முறையில் நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், இவ்வாண்டு 12ஆவது தேசிய மக்கள் பேரவை செயல்படும் கடைசி பதவி ஆண்டாகும். நடப்புக் கூட்டத் தொடரில் அடுத்த தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளின் இடங்கள் மற்றும் தேர்தல், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறை ஆகியவை தொடர்பான ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாட்டின் உயர் அதிகார நிறுவனமான சீனத் தேசிய மக்கள் பேரவையின் பங்கை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று சாங் தேச்சியாங் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040