இவ்வாண்டுக்கான இரு கூட்டத் தொடர்களின்போது வழங்கப்பட்ட அரசுப் பணியறிக்கையில், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத் திறனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனா பெற்றுள்ள சாதனைகளை மீளாய்வு செய்தால், சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் உயர்வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று இணைய பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த வளர்ச்சியைப் பன்னாட்டுச் சமூகமும் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
உலகளவில் உச்ச நிலையிலான சயின்ஸ் எனும் இதழின் முன் அட்டையில், முன்கண்டிராத முறையில் சீன அறிவியலாளர்களின் 4 ஆய்வு கட்டுரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான சீனாவின் ஒதுக்கீடு 2009ஆம் ஆண்டில் ஜப்பானையும் 2013ஆம் ஆண்டில் ஐரோப்பாவையும் தாண்டியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவைத் தாண்ட வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சீனா முன்னேறி வருகிறது. உலகின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் உச்சிக்கு மீண்டும் செல்ல சீனா பாடுபட்டு வருகிறது என்று அமெரிக்காவின் தி வால்ஸ்ட்ரீட் ஜார்னல் நாளேட்டில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. (வான்மதி)