• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உத்தரப் பிரேதச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு
  2017-03-20 14:52:31  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹிந்து மடத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

மாநிலத் தலைநகர் லக்னௌவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆதித்யநாத்துக்கு மாநில ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவருடன், கேஷவ் பிரசாத் மௌரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகவும், குறைந்தது 41 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பின், மோடிக்கு நன்றி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார். மேலும், மோடியின் 'அனைவருடன், அனைவருக்கும் வளர்ச்சி' என லட்சியத்துக்கு இணங்க மாநிலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக மட்டும் 312 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்கா வரவேற்பு
• சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
• ஆப்கானில் அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு எதிரொலிப்பு
• ஈராக் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு
• குட்ரேஸ்:ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்
• டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
• அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
• ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040