சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையம் நடத்திய சீன வளர்ச்சி மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டம், மார்ச் 20ஆம் நாள் நிறைவடைந்தது. உலகமயமாக்க வளர்ச்சியில் இந்த ஆண்டு கூட்டம் மிகுந்த கவனம் செலுத்தியது. உலகமயமாக்கம், எல்லா நாடுகளுக்கும் நலன்களைக் கொண்டு வரும். எதிர்காலத்தில், நலன்களை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இதில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் உறுதியற்ற காரணிகள் அதிகரிக்கும் பின்னணியில், உலகமயமாக்கம், உலகின் அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒரு முக்கியமாக விவாதிக்கப்படும் கருப்பொருளாகும். உலகமயமாக்கத்திலிருந்து அனைத்து நாடுகளும் நலன்களைப் பெறலாம் என்று ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைவர் சின் லி ஜூன் இக்கருத்தரங்கில் தெரிவித்தார். அவர் கூறியதாவது
உலகமயமாக்கம், நாடுகள் அனைத்திற்கும் நலன்களைக் கொண்டு வரும். இதில் சில நாடுகள் தோல்வியடைவது என்ற கருத்துக்களை நான் எதிர்க்கின்றேன். வளரும் நாடுகள், உலகமயமாக்கத்திலிருந்து நலன்களைப் பெறலாம். வளர்ச்சி அடைந்த நாடுகள் தலைமை தாங்கும் என்ற பின்னணியில் இத்தகைய நாடுகள் நலன்களைப் பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.
உலகமயமாக்கத்திலிருந்து பல்வேறு நாடுகள் நலன்களைப் பெறும் நிலைமை வேறுபடுகிறது. இதனால்தான், உலகமயமாக்க முன்னேற்ற வளர்ச்சிப் போக்கு, சில இன்னல்களை எதிர்நோக்குகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட முன்னாள் அமெரிக்க நிதி அமைச்சர் ஜெகப்லூ இக்கருத்துகளுக்கு ஆரவளித்தார். பல்வேறு நாடுகளின் உள்நாட்டுக் கொள்கையின் வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டு, உலகமயமாக்க முன்னேற்றப் போக்கு கொண்டு வரும் கூட்டு நலன்களை சில நாடுகள் நன்றாகப் பெற முடியாது. மேலும், இதில் பணிகளின் தன்மைகள் மற்றும் தொடர்பு பயன்கள் இதற்குக் காரணங்களாகும். உலகமயமாக்கம், மேலும் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதை நன்றாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
இத்தகைய கூட்டம் மற்றும் ஜி 20 மாநாட்டில், கொள்கையை நடத்தியவரான நாங்கள், பொது மக்களுக்கு சிக்கலான, தொழில் நுட்பம் வாய்ந்த விவகாரங்களை விளக்கிகூறுவது மட்டுமல்லாமல், இத்தகைய கொள்கைகள், அவர்களுக்கு எந்த நலன்கள் அல்லது மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இத்தகைய கொள்கைகள், வேலை வாய்ப்புக்களை எப்படி தீர்ப்பது என்பது முக்கியம் என்றார் அவர்.