• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு லீ கெச்சியாங் பயணம்
  2017-03-22 09:20:19  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் 21ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

மார்ச் 22ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, சீன தலைமையமைசச்ர் லீ கெச்சியாங் ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். 11 ஆண்டுகளுக்கு பிறகு, சீனத் தலைமையமைச்சர் ஒருவர் இரு நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இரு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பின், இரு நாடுகளுடனான உறவு பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்ந்துள்ளது. லீ கெச்சியாங்கின் பயணம் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவில் மேலும் வளர்ச்சியை தூண்டி, நாட்டு மக்களுக்கு நன்மைகளை அளிக்கும். ஆசிய-பசிபிக் பிரதேசத்திலும் உலகின் மற்ற இடங்களிலும் 3 நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கத்தை முன்னேற்றுவது, பிரதேச அமைதி, தலைப்பு மற்றும் செழுமையை பேணிக்காப்பதின் குறியீடு இது என்று சீன துணை வெளியுறவு அமைச்சர் செங் செ குவாங் தெரிவித்தார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040