ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியில் இணைய, ஆப்கானிஸ்தான், கனடா உள்ளிட்ட 13 புதிய விண்ணப்பதாரர்களை ஒப்புக்கொண்டுள்ளதாக, இவ்வங்கியின் ஆளுநர்கள் குழு 23ஆம் நாள் வியாழக்கிழமை பெயஜிங்கில் அறிவித்துள்ளது. இவற்றோடு, ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் மேலதிக நாடுகள் மற்றும் பிரதேசங்கள் ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியில் இணைய விரும்புவதுடன், இவ்வங்கி, சர்வதேச நிறுவனமாக மாறும் முன்னேற்றப் போக்கு உறுதியாக விரைவுபடுத்தப்படும் என்று வங்கி ஆளுநர் ஜின் லீசுன் தெரிவித்துள்ளார்.