ஆண்டுக் கூட்டத்தின் போது, சிங்கப்பூர் கெளரவ மூத்த அரசியல் கருத்துரைஞர் கோ சோஜ் டொங், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கித் தலைவர் ஜின் லீ ச்சுன், சீன மக்கள் வங்கித் தலைவர் சோ சியவ் சுவன் உள்ளிட்ட விருந்தினர்கள், "உலகமயமாக்கம் மற்றும் தாராள வர்த்தகத்தின் எதிர்காலத்தை எதிர்நோக்குவது" என்ற தலைப்பு தொடர்பாக ஆழமாக விவாதித்தனர். உலகமயமாக்க போட்டியில் பங்கெடுக்கும் நாட்டின் போட்டியாற்றல் போதுமானதாக இல்லை என்றால், சில வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று விருந்தினர்கள் பலர் கருத்துத் தெரிவித்தார். சிங்கப்பூர் கெளரவ மூத்த அரசியல் கருத்துரைஞர் கோ சோஜ் டொங் இது குறித்து பேசுகையில், உலகமயமாக்கத்தால் பொருளாதாரத்துக்கு கிடைக்கும் நன்மைகள் அதிகமாக இருந்த போதிலும், எதிர்மறை காரணிகள் பயன்தரும் முறையில் கையாளப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"உலகமயமாக்கம் தடுக்கப்பட முடியாதது. தொழில் நுட்ப வளர்ச்சியும், இணைய வளர்ச்சியும் தடுக்கப்பட முடியாதவை. ஆனால், உலகமயமாக்கத்துக்கான எதிர்மறை காரணிகள் பயன்தரும் முறையில் கையாளப்பட வேண்டும். ஒரு புறம், பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் ஆற்றல் ஆக்கப்பணி மூலம் வளர்ச்சியடைவதை முன்னேற்ற வேண்டும். மறு புறம், பன்னாடுகள் பயிற்சி மூலம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கருதுகின்றேன்" என்றார் அவர்.
ஓராண்டு இயங்கி வந்துள்ள ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உலகமயமாக்கப் போக்கில் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகமயமாக்கப் போக்கில், அடிப்படை வசதிகளுக்கான முதலீடு, மேலதிக மக்களுக்கு நன்மை பயக்கும் என்று இவ்வங்கித் தலைவர் ஜின் லீ ச்சுன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நன்மை பெறும் அளவு வேறுபட்டதாக இருந்த போதிலும் உலகமயமாக்கப் பொருளாதாரத்தில் தோல்வியடையும் தரப்பு இல்லை என்று வலியுறுத்துகின்றேன். அடிப்படை வசதிகளுக்கான முதலீடு மூலம், பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பை அதிகரிப்பது, அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. முதலீடு மூலம் மேலதிக மக்களுக்கு நன்மை தரும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகள் முதலீட்டுத் திட்டப்பணிகளை செவ்வனே ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார் அவர்.