• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன விளைநிலங்களைப் பாதுகாப்பது
  2017-03-28 14:27:53  cri எழுத்தின் அளவு:  A A A   

விளைநில பரப்பைப் பேணிக்காப்பது, தற்போது சீன விளைநிலம் பாதுகாப்புப் பணியின் முக்கிய அம்சமாகும். இதற்காக, இனிமேல், விளைநிலத்தை, வேறு துறைகளுக்காகப் பயன்படுத்த கூடாது அல்லது மிக குறுகிய அளவில் மட்டுமே, பயன்படுத்தும் கோட்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும். அதோடு விளைநிலம் பற்றிய கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சர் ஜியாங் தா மிங் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, நவீனமயமாக்கக் கட்டுமானக் கொள்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, நில நிர்வாகம், விளைநிலக் கட்டுப்பாடு குறித்து சீன அரசு, இரு முறைகளில் அறிக்கைகளை வெளியிட்டது. விளைநில பாதுகாப்பு பற்றிய ஆவணம் ஒன்றை இவ்வாண்டு ஜனவரி திங்களில் சீன அரசவை வெளியிட்டது. இதன்வழி, புதிய காலத்தில், விளைநிலப் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியைச் சீன அரசவை பன்முகங்களிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று, சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சகமும், வேளாண் துறை அமைச்சகமும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வேளாண் துறை தலைமை குழுவும், காணொலி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டன.

நிரந்தர விளைநிலத்தை உறுதிப்படுத்துவதை நிறைவேற்றி, பாதுகாக்க வேண்டும். நிரந்தர விளைநிலங்களைக் கட்டிட துறை பணிகளுக்காகப் பயன்படுத்த கூடாது என்ற கோட்பாட்டில் பல்வேறு இடங்களின் அரசாங்கங்கள் ஊன்றி நிற்க வேண்டும் என்று இவ்வாவணம் வேண்டுகோள் விடுப்பதாக ஜியாங் டா மிங் வலியுறுத்தினார்.

கட்டிட துறையில் பயன்படுத்தப்படும் நிலப்பரப்பை, இதர துறைகளில் பயன்படுத்தப்படும் நிலப்பரப்புடன் இணைக்க வேண்டும். கட்டிட துறையில் பயன்படுத்தப்படும் விளைநிலங்களின் அளவை குறைக்க வேண்டும் என்றும் இவ்வாவணத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விளைநில பாதுகாப்புக்கான மீட்புதவி அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும். அதாவது, விளைநிலத்தை பேணிகாக்கும் விவசாயிகளுக்கு சரியான அளவில் மீட்புதவி அளிக்க வேண்டும் என்று இவ்வாவணம் தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளில், சே ச்சியாங், ஜியாங் சூ ஆகிய மாநிலங்களிலும், செங் தூ, ஃபோ சன் ஆகிய நகரங்களிலும், விளைநில பாதுகாப்புக்கான மீட்புதவி அமைப்பு முறை உருவாக்கப்பட்டு, நிறைய பயன்கள் பெறப்பட்டுள்ளன. சொந்த தனிச்சிறப்புகளை கொண்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக் கற்று கொள்ள வேண்டும் என்று சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சம் விரும்புகிறது.
விளைநில பாதுகாப்பு பற்றி சீன அரசவை மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகள், விளைநில பாதுகாப்பை வலுப்படுத்தும் மன உறுதியை வெளிகாட்டியுள்ளது. விளைநிலப்பரப்பைப் பேணிகாக்கும் கோட்பாட்டில் பல்வேறு நிலை வேளாண் வாரியங்கள் ஊன்றி நிற்க வேண்டும். தானிய தயாரிப்பு ஆற்றலை குறைக்கக் கூடாது. அதேவேளை, விவசாயிகளின் விருப்பத்திற்கும் நலனுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சீன துணை வேளாண்மையமைச்சர் யூ சிங் ரூங் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், பல்வேறு நிலை அரசாங்கங்கள், விளைநிலத்தைப் பாதுகாக்கும் பணியை நிறைவேற்றுவதை மதிப்பீடு செய்யும் முக்கிய குறியீடாக, விளைநிலப்பரப்பைப் பேணிக்காப்பதை கொள்ள வேண்டும். அதிகாரிகள் கடமைகளை நிறைவேற்றுவது, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியற்றிற்கான சோதனையின் முக்கிய அம்சமாக, விளைநிலத்தை பேணிக்காப்பதை கொள்ள வேண்டும் என்று சீன நிலம் மற்றும் மூலவள அமைச்சர் ஜியாங் டா மிங் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040