சீனத் தயாரிப்புத் தொழிலுக்கான நாணய ஆதரவை வலுப்படுத்தும் வழிகாட்டும் முன்மொழிவு ஒன்றைச் சீன மக்கள் வங்கி, சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆகியவை வெளியிட்டுள்ளன. உண்மை பொருளாதாரத்தை பெருமளவில் வளர்த்து, தயாரிப்புத் தொழிலை வலிமை மிக்க ஒன்றாக வளர்ப்பதிற்கான நாணய ஆதரவையும் சேவையையும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்த வாரியங்கள் தெரிவித்தன.
தயாரிப்புத் தொழிலின் முன்னேற்றத்துக்காக, தயாரிப்புத் தொழில் வல்லரசாக சீனா மாற்றும் வகையில், சீனத் தயாரிப்பு 2025 என்ற முதல் 10 ஆண்டு கால வளர்ச்சி திட்டத்தை, 2015ஆம் ஆண்டில் சீன அரசு வகுத்துள்ளது. சீன தயாரிப்பு 2025 என்ற திட்டத்துக்கு நாணய ஆதரவையும் சேவையையும் வலுப்படுத்தும் வகையில், 28ஆம் நாள் சீன மக்கள் வங்கியும் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் முன்மொழிவு ஒன்றை வெளியிட்டன.
தற்போதைய சீனத் தயாரிப்புத் தொழில், பின்தொடர்பு வழிமுறையிலிருந்து, புதுப்பிக்கும் தொழில் முறையாக மாற்றம் கொண்டுள்ளது. பாரம்பரியமயமாக்கத்திலிருந்து, தகவல்மயமாக்கம், இணையமயமாக்கம், அறிவுமயமாக்கம் ஆகியற்றுக்குரிய மாற்றம் கொள்ளும் போக்கில், சீன தயாரிப்புத் தொழில் உள்ளது. இந்த வளர்ச்சி போக்குக்கு, நிறைய வசதிகள் தேவைப்படும். இதனால், நாணய ஆதரவும் தேவைப்படும் என்று சீன தயாரிப்பு வல்லரசு நெடுநோக்கு ஆலோசனை குழுவின் உறுப்பினர் லி போ ஹு சுட்டிக்காட்டினார்.
சில உண்மையான பொருளாதார தொழிற்சாலை, இதர துறைகளில் வளர்வது, சீனாவின் தயாரிப்புத் தொழிலின் அடிப்படையைப் பாதிக்கும். சீன மக்கள் வங்கி உள்ளிட்ட வாரியங்கள் வெளியிட்ட இம்முன்மொழிவு, தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட உண்மை பொருளாதாரத்துக்கான நாணய ஆதரவை வலுப்படுத்த விரும்புகிறது என்று வூ ஹன் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் பங்கு பத்திர ஆய்வகத்தின் தலைவர் துங் தாங் சின் கருத்து தெரிவித்தார்.
தயாரிப்புத் தொழிலின் சிறப்புகளுக்கு பொருந்திய கடன் நிர்வாக அமைப்பு முறையையும் நாணய சேவை அமைப்பு முறையையும் முன்னேற்ற வேண்டும் என்று இம்முன்மொழிவு வலியுறுத்தியுள்ளது. நம்பிக்கைசார் கடன், காப்புரிமைசார் கடன் ஆகிய வழிமுறைகளின் மூலம், தயாரிப்புத் தொழிற்சாலையின் நாணய தேவையைத் தொடர்புடைய வாரியங்கள் நிறைவு செய்யும்.
பல்வேறு நிலை நாணய சந்தையின் வளர்ச்சியை வலுப்படுத்தி, தயாரிப்புத் தொழில் வளர்ச்சி முறை மாற்றத்துக்கு நாணய ஆதரவு அளிக்க வேண்டும் என்று இம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(கலைமணி)