• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சியாமென் சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை
  2017-03-29 17:01:15  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டு சியாமென் சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 18ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை சியாமென் நகரில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக 29ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் இத்தகவல் வெளியானது.

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 9ஆவது பேச்சுவார்த்தையை ஒட்டி நடைபெறும் இந்த முதலீட்டு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது, பிரிக்ஸ் நாடுகளின் முதலீடு தொடர்பான காட்சியிடம் உருவாக்கப்படும். பிரிக்ஸ் நாடுகளின் மின்னணு வணிக அலுவல் தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடத்தப்படும். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் கொண்டு வந்த புதிய வாய்ப்புகள் பயன்படுத்தப்பட்டு, பட்டுப்பாதை நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முதலீடு தொடர்பான காட்சியிடமும் நிறுவப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040