அடுத்த 15 ஆண்டுகளுக்கான, பெய்ஜிங்கின் வளர்ச்சி வரைவு திட்டம் ஒன்றைச் சீன அரசு 29ஆம் நாள் வெளியிட்டு, சமூகத்தின் பல்வேறு துறைகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது. இவ்வரைவு திட்டத்தின் படி, அரசியல், பண்பாடு, சர்வதேச பரிமாற்றம் ஆகிய துறைகளில் சீனாவின் மையமாக பெய்ஜிங் மாற வேண்டும். சர்வதேச முதல் நிலை நகரமாகவும் தரமான இணக்கமான உகந்த நகரமாகவும் பெய்ஜிங் மாற வேண்டும். 1949ஆம் ஆண்டு நவசீன நிறுவப்பட்ட பிறகு, உருவாக்கப்பட்ட 7வது பெய்ஜிங் வளர்ச்சி வரைவுத் திட்டம், இதுவாகும். எதிர்காலத்தில் சீனாவின் தலைநகர் எந்த மாதிரியாக இருக்கும்?பெரிய மக்கள் தொகை, போக்குவரத்து சிக்கல், உயர்வான வீட்டு விலை, காற்று மாசுபாடு ஆகிய பிரச்சினைகள் எப்படி தீர்க்கப்படும். இவை குறித்து, இவ்வரைவு திட்டம் தீர்ப்பு முறையை வெளியிட்டுள்ளது.
மையப் பகுதி, துங்சோ துணை மையப் பகுதி, வடக்கு-தெற்கு நடுவண் சாலை, கிழக்கு-மேற்கு நடுவண் சாலை, புதிய விமான நிலையத்தை அடங்கிய பல புறநகரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நகர அமைப்பு முறை பெய்ஜிங்கில் உருவாக்கப்படும். மையப் பகுதியின் சில முக்கிய நிறுவனங்கள், புறநகரில் அமைக்கப்பட வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள், பெய்ஜிங் உலகின் முதல் நிலை தரமுடைய நகராக மாறும். சிக்கலான போக்குவரத்து, உயர்வான வீட்டு விலை, மாசுபாட்டு காற்று ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நிறைய சாதனைகள் பெறப்படும். பெய்ஜிங், தியன் ஜின், ஹே பேய் பிரதேச ஒருமைப்பாடு அடிப்படையில் உருவாகும். 2020ஆம் ஆண்டில், பெய்ஜிங்கின் மக்கள் தொகை, 2 கோடியே 30 இலட்சத்திற்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
வெளியிடப்பட்டுள்ள இவ்வளர்ச்சி வரைவு திட்டம் மார்ச் 29ஆம் நாள் முதல் ஏப்ரல் 27ஆம் நாள் வரை, பெய்ஜிங் கட்டுமான திட்ட வரைவு கண்காட்சியகத்தில் பொது மக்களின் கருத்துகளைக் கேட்பதற்காக வைக்கப்படும். பெய்ஜிங்கின் வளர்ச்சியின் மீது கருத்துகளை தெரிவிக்க விரும்பும் பொது மக்கள், இக்கண்காட்சியகத்திலும் தொடர்புடைய இணையத்தளம், அல்லது மின்னஞ்சலின் மூலமும் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வரைவு திட்டத்தின் மீது பெய்ஜிங்கின் பொது மக்கள், நிறைய கவனம் செலுத்தி, கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெய்ஜிங்கின் எதிர்கால வளர்ச்சி, அமைப்பு முறை, மூலவள வினியோகம், நகரமும் கிராமம் இணைந்த வளர்ச்சி ஆகியவற்றைத் தவிர, பொது மக்கள் கவனம் செலுத்திய சில குறியீடுகளை இவ்வரைவு திட்டம் வெளியிட்டது. எடுத்துக்காட்டாக, 2020ஆம் ஆண்டில், பெய்ஜிங் சுரங்க இருப்பு பாதை நீளம், 1000 கிலோமீட்டரை எட்டும். 2030ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் பசுமை வழிமுறையில், பயணம் மேற்கொள்ளும் மக்களின் விகிதம், 80 விழுக்காட்டை எட்டும். 2020ஆம் ஆண்டில், பி எம் 2.5 ஆண்டுசராசரி செறிவு கனமீட்டருக்கு 56 மைக்ரோகிராமை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)