அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு, புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மீட்சி ஆகிய காரணங்களால், இவ்வாண்டின் முதல் காலாண்டில், புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களின் மதிப்பு பெரிதும் உயர்ந்து வருகிறது.
நாணயக் கொள்கையை அமெரிக்கா மந்தமாக இறுக்கி வருவது, வரி விகிதத்தை குறைப்பது மற்றும் நிதித் துறையை வளர்ப்பதில் டிரம்ப் அரசு வழங்கிய வாக்குறுதியின் மீது மக்களின் சந்தேகம் ஆகியவற்றால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது என்று பிரிட்டனின் ஃபைனென்ஷல் டைமஸ் ஏட்டின் செய்தியில் கூறப்பட்டது.
புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் சந்தையில், நிதி நிலைமை சீராக உள்ளது, பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் குறைந்து வருகிறது என்று கோடுல்மன் சேகஸ் குழுவின் ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினர். (வாணி)