• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவின் பங்கு 60 விழுக்காடு
  2017-04-06 18:27:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய வளர்ச்சி வங்கி 6ஆம் நாள் பிலிப்பைன்ஸின் மணிலாவில் வெளியிட்ட 2017ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி எதிர்காலம் என்ற அறிக்கையில், வெளியிடங்களில் காணப்படும் அதிகமான தேவை, உலகில் பெருமளவு விற்கப்படும் வர்த்தகப் பொருட்களின் விலை உயர்வு, ஆசிய நாடுகளில் சீர்திருத்தங்கள் ஆகிய காரணிகளால், ஆசியாவில் வளரும் நாடுகள் உலகப் பொருளாதார வளர்ச்சியில் 60 விழுக்காட்டு பங்கை ஆற்றும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

2017 மற்றும் 2018இல், ஆசியாவில் வளரும் நாடுகளின் பொருளாதாரம் 5.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று அறிக்கையில் மதிப்பிடப்படுகிறது.

அனைத்து துணைக் கண்டங்களிலும், தெற்காசியாவின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக உள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் இதன் பொருளாதாரம் முறையே 7விழுக்காடு மற்றும் 7.2விழுக்காடு அதிகரிக்கும். இவற்றில், 2017 மற்றும் 2018இல் இந்தியப் பொருளாதாரம் 7.4விழுக்காடு மற்றும் 7.6விழுக்காடு உயரும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040