• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மின் வலைப்பின்னல் திட்டப்பணி
  2017-04-07 09:01:21  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் மின் வலைப்பின்னலின் திபெத் மத்திய பகுதி வலையமைப்புத் திட்டப்பணி, 6ஆம் தேதி திபெத்தின் நிங்ச்சியில் கட்டியமைக்கப்படத் துவங்கியது. இதன் மொத்த முதலீட்டுத் தொகை 1620 கோடி யுவானாகும். உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான, இடைத்தூரம் மிக அதிகமான பீடபூமியிலுள்ள மின்சார ஊடனுப்பித் திட்டப்பணி இது ஆகும். இது திட்டப்பணியின் கட்டமைப்பு நிறைவடைந்த பிறகு, ச்சிங்காய்-திபெத் வலையமைப்புத் திட்டப்பணியும், சிச்சுவான்-திபெத் வலையமைப்புத் திட்டப்பணியும் இணைவது நனவாக்கப்படும். இதன் மூலம், திபெத்தின் மத்திய பகுதியில் மின்சார தேவை நிறைவு செய்யப்படும். (ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040