இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக உள்ளது என்று சீன மனித வளம் மற்றும் சமூக காப்புறுதி துறை துணை அமைச்சர் சாங் யீட்சென் தெரிவித்துள்ளர். சீன அசவை 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், இவ்வாண்டில் சிக்கலான பின்னணியில், வேலை வாய்ப்புகளை அதிகரித்து இத்துறையின் நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையில், சீன அரசு மேலும் ஆக்கப்பூர்வக் கொள்கைகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளாக, சீனாவின் நகரங்களில் ஆண்டுக்குப் பதிதாக அதிகரிக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலட்சத்துக்கும் மேலாகும். தவிரவும், நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலை இல்லா விகிதமும், கள ஆய்வு மூலம் கிடைத்த வேலை இல்லா விகிதமும் குறைந்த நிலையில் உள்ளது. தொடர்புடைய கள ஆய்வின்படி, இவ்வாண்டின் முதல் 3 திங்களில் பணி அமர்வு இடங்களும் வேலை வாய்ப்புகளைத் தேடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்களிலிருந்து வெளியேறும் மக்களின் வேலை வாய்ப்புப் பிரச்சினை ஒப்பீட்டளவில் உரிய முறையில் தீர்க்கப்பட்டுள்ளது என்று சாங் யீட்சென் குறிப்பிட்டார்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் வேலை வாய்ப்பு என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. தற்காலத்திலும் எதிர்வரும் காலத்திலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் சொந்தமாக தொழில் நடத்த துவங்குவதையும் முன்னேற்றும் புதிய கொள்கைகளை சீன அரசவை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் உற்பத்தி திறனைச் சரிப்படுத்தும் போது பதவி மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆகியோர் மிகவும் கவனம் செலுத்தப்படுவர். குறிப்பாக, இவ்வாண்டு பல்கலைக்கழங்களிலிருந்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 79 இலட்சத்து 50 ஆயிரமாகும். இது வரலாற்றில் மிக உயர்ந்த பதிவாகும். இது பற்றி சாங் யீட்சென் குறிப்பிடுகையில், சமூக அமைப்புகள் பட்டத்தாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், வரி குறைப்பு, மானியம் போன்ற சலுகைகளை அனுபவிக்கலாம். மேலும், சொந்தமாக தொழில் நடத்த துவங்கியவருக்கும் அரசு மானியம் வழங்கும் என்று தெரிவித்தார்.
இரும்புருக்கு, நிலக்கரி முதலிய உற்பத்தி துறையில் உற்பத்தி திறன் சரிப்படுத்தலால் ஒரு பகுதி தொழிலாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு இப்பகுதி தொழிலாளர்களுக்கு கொள்கை ரீதியான ஆதரவு வழங்கும் என்றும் சாங் யீட்சென் குறிப்பிட்டார். (வாணி)