• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்-அலஸ்கா மாநிலத் தலைவர் சந்திப்பு
  2017-04-08 15:11:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்ளூர் நேரப்படி 7ஆம் நாள் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அன்கோராஜ் நகரில் அம்மாநிலத் தலைவர் பில் வாக்கர் சந்தித்துரையாடினார்.

அலாஸ்கா மாநிலம், சீனாவுடன் நீண்டகால தொடர்பு கொண்டுள்ளது. சீனாவும் இம்மாநிலமும் இணைந்து ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பாக இரு தரப்பும் ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்க வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீனா, அலாஸ்கா மாநிலத்தின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகும். அலாஸ்கா மாநிலத்தில் வளங்கள் அதிகம். வேளாண் துறை, மீன்பிடித் துறை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, தாது பொருட்கள், சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை அதிகரிக்க இம்மாநிலம் விரும்புவதாக பில் வாக்கர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040