2015-2016 சீன மகளிர் மற்றும் குழந்தை அறக்கொடை பரிசளிப்பு விழா அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளில், சீன குழந்தைகள் நிதியமும், சீன மகளிர் வளர்ச்சி நிதியமும் மொத்தம் 220 கோடி யுவான் நிதி மற்றும் உதவிப் பொருட்களைத் திரட்டி, 2 கோடியே 70 இலட்சம் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவி அளித்துள்ளன என்று பரிசளிப்பு விழா கூட்டத்திலிருந்து கிடைத்த செய்தி கூறுகின்றது.
கடந்த 2 ஆண்டுகளில் சில துறைகளில் முக்கியமாக பணி மேற்கொண்டுள்ளோம் என்று சீன குழந்தைகள் நிதியத்தின் தலைமைச் செயலாளர் சூ சியங் கூறினார். முதலாவதாக பெண் குழந்தைக்கான சுன்லெய் திட்டம் மூலம் சுமார் இரு இலட்சத்து 70 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு சமநிலை கல்வி வாய்ப்புகளை வழங்கினோம். இரண்டாவதாக, 7 இலட்சத்து 58 ஆயிரம் கண்பார்வை மற்றும் செவி குறைபாடு பிரச்சினை கொண்ட குழந்தைகள் நிதியுதவி பெற்றுள்ளனர். மூன்றாவதாக, குழந்தைகளிடையில் பாதுகாப்பு அறிவுகளை பரப்புரை செய்யும் வகையில், 101 பாதுகாப்பு வகுப்புகளைக் கட்டியமைத்துள்ளோம். நான்காவதாக, குய் சோ, ஹுனான் முதலிய மாநிலங்களில் பணிக்காக பெற்றோர்கள் வெளியூரில் இருப்பதால் சொந்த ஊரில் வசிக்கும் குழந்தைகளுக்கு 680 பாதுகாப்பு நிலையங்களைக் கட்டியமைத்துள்ளோம் என்று யூ சிசங் கூறினார்.
சீனாவின் மக்கள் தொகை 137.4 கோடியாகும். இதில் மகளிரின் விகிதாசாரம் 48.8 விழுக்காடாகும். மகளிர் உரிமையை பாதுகாத்து மகளிர் இலட்சியத்தை முன்னேற்றும் நன்கொடை நிறுவனமாக சீன மகளிர் வளர்ச்சி நிதியம் திகழ்கின்றது. வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப கல்வி முதலிய துறைகளில் இந்நிதியம் பல அறக்கொடை திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
2015,2016 ஆண்டுகளில், சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் மாவட்டங்களில் சீன மகளிர் வளர்ச்சி நிதியம் 108 கோடியே 50 இலட்சம் யுவான் நிதியுதவியுடன் அறக்கொடை திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் மகளிர் இவற்றிலிருந்து நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனத் தேசிய மகளிர் சங்கத்தின் தலைவர் சென் யேயே பரிசளிப்பு விழாவில் கூறுகையில், சீனக் குழந்தை நிதியமும் சீன மகளிர் வளர்ச்சி நிதியமும் மகளிர் மற்றும் குழந்தைகளின் நடைமுறை தேவைக்கிணங்க, பல்வேறு சமூக வட்டாரங்களிலிருந்து நன்கொடை வளத்தைத் திரட்டி, பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீரான சமூகப் பயன் பெற்றுள்ளன. பல்வேறு சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் ஆதரவிலிருந்து இது பிரிக்கப்பட முடியாது என்று கூறினார்.